Friday, February 3, 2017

ரோஹின்யா முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவு : ஐ.நா கடும் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ள கூட்டு பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் ஜமாலிடா
மியான்மரின் அரசு படைகள், பெரும் எண்ணிக்கையில், ரோஹின்யா முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை படு  கொலைச் செய்திருப்பதாகவும், ரோஹின்யா முஸ்லிம்கள் பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகவும் ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பு கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகவும் மற்றும் இன சுத்திகரிப்பாக இந்த வன்செயல்கள் கருதப்படக்கூடியவை என்று ஐ.நா மியான்மரை எச்சரித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மியான்மரிலிருந்து அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச்சென்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளில் 200க்கும் அதிகமானோரை ஐ.நா பேட்டி கண்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரபூர்வமான குற்றச்சாட்டை வைத்துள்ளது.

சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது இழைத்த கொடுமைகளை முன்னர் மறுத்து வந்த மியன்மார் அரசு, தற்போது ஐ.நாவின் குற்றச்சாட்டுக்களை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்வதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment