Sunday, December 11, 2016

உத்தமரா பொறுப்பேற்க முடியும்?"கொலைக்காரர்கள் எல்லாம்
நாடாளும்போது,
கொலை செய்திருப்பாரோ
என்று-
யூகக் குற்றம் சாட்டப்பட்டுக் 
கொண்டிருப்பவர்
கொலைக்காரர் நாட்டில்
நாடாளவந்தால்தான் என்ன?

மக்களைப்போலதான்
தலைவர்கள் என்ற
தகுதி முத்திரை
ஏற்கனவே 
குத்தப்பட்டுவிட்ட
நிலையில்..
உத்தமர்களா இனி 
பொறுப்பேற்க முடியும்?" -- இக்வான் அமீர்

வேற என்ன சொல்றது?”மோடி சர்க்கார்.. மோடி சர்க்கார் கொஞ்சம் தமிழ்நாட்டு பக்கம் பாருங்க.. இருக்கிற கேஸையெல்லாம் தூசி தட்டி எடுங்க!!

(உங்க கேஸை சோனியா ஜீ பார்த்துப்பார்..!-மைன்ட் வாய்ஸ்)”

எத்தனை அம்மாங்கடா கோபாலு?


”டாஸ்மார்க் மப்பு கலையறதுக்குள்ளே இதென்னடா புதுகதை கோபாலு? எத்தனை அம்மாங்கடா கோபாலு?”

நாளை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் 'வர்தா' புயல்:


தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயல் வர்தா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி சென்னைக்கு வடகிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் வர்தா புயல், தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என்பதால், தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று மாலை துவங்கி நாளை வரை பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். மேலும், வர்தா புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Saturday, December 10, 2016

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கருத்து

விஜயதரணி
முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்பதற்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி நேற்று மாலை புதுச்சேரி வந்திருந்தபோது இதை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் இறப்பு குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்துள்ளது. அப்போலோ மருத்துவமனை இரவு 11.30 மணிக்கு இறந்ததாகக் கூறியுள் ளது. ஆனால் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இரவு 11.09 மணிக்கு இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார். இது பெரிய ஆச்சரியமாக உள்ளது. அதிகாரப்பூர்வமாக இறப்புச் சான்றி தழில்கூட இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்றுதான் இருக்கிறது. அப்படி இருக் கும்போது நாட்டின் பிரதமர் 11.09 மணிக்கே எவ்வாறு இரங்கல் செய் தியை கொடுத்தார் என்று பார்க்கும் போது இந்த மரணத்தில் பல்வேறு சந் தேகங்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று நான் கருதுகிறேன்.

75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாத சூழல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான புகைப்படமோ, வீடியோ காட்சிகளோ இதுவரை வெளியிடப்படவில்லை. மக்களின் சந்தேகத்தை போக்க இப்போதாவது அந்த புகைப்படங்களையோ, படக் காட்சி களையோ அதிமுகவோ அல்லது தமிழக அரசோ வெளியிட வேண்டும்.

ஆளுநர் அப்போலோ மருத்துவ மனைக்கு சென்றாரே தவிர, ஒரு முறை கூட சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த முதல்வரை அவர் பார்க்கவில்லை. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். ஒரு முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. முதல்வர் இறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். உண்மைகளை மக்களிடம் கூற வேண்டும் என்றார் விஜயதரணி.

Tell Me Nanaji 075: உருகி மாய்த்துக் கொள்வீரோ... உயிரை..!

Thursday, December 8, 2016

மனசோட மடல்கள்: 001

மனசோட மடல்கள்… எனது வாழ்வில் நான் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்களுடனான எனது கருத்து பறிமாற்றங்கள். நிஜங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால்.. நீங்களும் மடல்களை வாசிக்கலாம். கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். - இக்வான் அமீர்


மதிப்பிற்குரிய சகோதரருக்கு,

தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..!

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களை இம்மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லுணர்வுகளுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இரு கரமேந்தி நெஞ்சுருக இறைஞ்சுகின்றேன். தங்களின் அன்பான மடல் கண்டேன். மகிழ்ந்தேன். அதேபோல, அடுத்து சொல்லப்போகும் சம்பவம் நினைவுக்கு வந்ததால்… மனதில் வருத்தமும் ஏற்பட்டது.
அது எப்போதும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கத்துறையினரின் அலுவலகம். உயர் அதிகாரி சங்கரும், அவருடைய சகாவும் அமர்ந்திருக்கிறார்கள். அலுவல் விஷயமாக பேசும் நண்பர் ஒரு மாதிரியாக காணப்படவே சங்கர், ”என்ன விஷயம்?” – என்று விசாரிக்கிறார்.

”ஒன்றுமில்லை சார்.. நாம் குழு ரீதியாக உயிரைக் கொடுத்து ஒருங்கிணைந்து பாடுபடுகிறோம். ஆனால், அந்த ருக்மிணியோ கடைசியில் தனி ஆளாக பெயரும், புகழும் தட்டிக் கொண்டு சென்றுவிடுகிறாள். கடந்த மூன்று “ரெய்டு“களை வேண்டுமானால் நினைத்துப் பாருங்களேன்! நான் சொல்ல வந்தது உங்களுக்கு விளங்கும்” – நண்பர் நெருடலை வெளிப்படுத்துகிறார்.

மூத்த அதிகாரி சங்கர், நண்பரைச் செல்லமாக கண்டித்தாலும், அவரது கருத்து மனம் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டதை அவரால் தடுக்க முடியவில்லை.

ருக்மிணி சற்று படபடப்பான அதேசமயம், துணிச்சலான பெண். ஜுனியர் அதிகாரி. கடத்தல்காரர்களைப் பிடிக்க சுங்கத்துறையினர் விரிக்கும் வலைகளில் முன்னணியில் நின்று கடத்தல்காரர்களைப் பிடிப்பவள். இளம் வயதுக்கேற்ப அலட்சியமும் அவளிடம் அதிகம்.

ருக்மிணி மீது அவளுடைய மூத்த அதிகாரி சங்கருக்கும் தப்பான அபிபிராயம் வளர்கிறது. நேரிடையாக அதை அவளிடமே வெளிப்படுத்தவும் செய்கிறார். அதைக் கேட்டு வழக்கம்போலவே ருக்மிணி கோபப்படுகிறாள். அந்தக் கோபம் வீட்டில், கல்லூரியில் பயிலும் தங்கையிடம் என்று பல இடங்களில் வெடிக்கிறது. வருங்கால கணவனிடமும் பாய்கிறது. கடைசியில், அந்த குழப்பமான மனநிலையிலேயே வேலையையும் விட்டுவிட முடிவெடுக்கிறாள். அதன்படியே ராஜினாமா கடிதத்தை மேல் அதிகாரியிடம் சமர்பிக்கவும் செய்கிறாள்.

”ருக்மிணி… ஒரு குழுவாக செயல்படும்போது, இப்படிப்பட்ட புரிதல் இன்மைகள் உண்டாவது சகஜம்தான்.! அதை மனம் விட்டு பேசும்போது, நம்மீதுள்ள தப்பிப்ராயங்கள் எல்லாம் களைந்துவிடும். அதைவிட்டுவிட்டு…. பெரிய பிரச்னையாக நினைத்து வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே… பிரச்னைகளோடு மோதக் கற்றுக் கொள். பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ள பழக்கிக் கொள். சரி. உனக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நன்றாக ஆலோசித்துவிட்டு அதன் பிறகு முடிவெடு!” – அறிவுறுத்தலோடு ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் மேலதிகாரி.

ருக்மிணியுடன் பல சாகஸங்கள் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்ற துணையாக விஷயத்தைக் கேள்விப்பட்டு அவளோடு தேனீர் அருந்த அழைத்துச் செல்கிறார்.

”ருக்மிணி… மிகப் பெரிய ஒரு லட்சியத்துக்காக நாம் குழுவாய் ஒன்றிணைந்துள்ளோம். சின்னஞ்சிறு கருத்து வேறுபாடுகளில் சிக்கி பெரிய நோக்கத்திலிருந்து விலகிவிடுவது புத்திசாலிதனமல்ல. இந்த லட்சியப் பணியிலிருந்து நீயோ, நானோ விலகிவிடுவதால்.. நஷ்டம் ஒன்றுமில்லை அல்லது இந்த அமைப்பு இழுத்து மூடப்போவதுமில்லை. அந்த இடத்துக்கு வேறு நபர்கள் வருவார்கள். மீண்டும் அந்தப் பணி தொடரவே செய்யும். அதனால், இது நமது நன்மைக்கான, லட்சியப்பணி என்பதை நினைத்துப் பார்..!” – தேனீர் அருந்திக் கொண்டே நண்பர் அறிவுறுத்துகிறார்.

முதலில் மறுத்துரைக்கும் ருக்மிணி, இரவில் தீர யோசிக்கிறாள். மேலதிகாரி, தன் வருங்கால கணவன், சக அதிகாரி சொன்ன அறிவுரைகளை அசைப்போடுகிறாள்.

கடைசியில், பிரச்னைகளுடன் போராட ருக்மிணி தயாராகிவிட்டாள். இலக்கை நோக்கி முனைப்புடன் முன்னேற முடிவெடுத்துவிட்டாள். இனி அவள் என்றும் சோர்ந்திடப்போவதில்லை. குழு ரீதியாக… கூட்டமைப்புடன் … செயல்பட தன்னை முழு அளவில் சீர்த்திருத்திக்  கொள்வதே இனி அவளது முதற் பணி.
 
சகோதரரே! இது 29.05.1992 சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “சங்கர்ஷ்“ தொடரின் இறுதிப்பகுதி. ஒவ்வொரு இயக்கவாதியும் படிப்பினைப் பெற வேண்டிய நல்ல நிகழ்ச்சி இது.

மிகச் சாதாரண சின்னஞ்சிறு இலட்சியம் கொண்ட ஓர் அமைப்பைச் சார்ந்தவர்களிடம் எவ்வளவு கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன், ஒருங்கிணைப்புடன், முழு வீச்சுடன் செயல்பட வேண்டியிருக்கிறது.

ஆனால், மிகப் பெரிய இலட்சியத்துக்காக.. மனித குலத்துக்கு வழிகாட்டுவதற்காக, அவர்களின் முன்னேற்றத்துக்காக, இறைநெறியை மேலோங்கச் செய்வதற்காக ஒன்று திரண்டிருப்பவர் நாம். அதற்காக ஒரே அணியாய் நின்று நமது சக்தி, சாமார்த்தியங்களை எல்லாம் ஒன்றுத் திரட்டி பாடுபட வேண்டியவர்கள் நாம். இந்நிலையில், இயக்கத்திலிருந்து விலக முடிவெடுத்துவிட்டேன்!” – என்று பேசுவது புத்திசாலித்தனமான செயலே அல்ல. .. ருக்மிணியைப் போல..!

ஓர் அமைப்போ, இயக்கமோ எனப்படுவது என்ன?

ஒரு கொள்கைக்காக.. அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் திரளும் பல்வேறு தனிநபர்கள் ஒன்று சேர்ந்து இயங்கும் குழுமம் அது. அதில் இடம் பெற்றிருப்பவர் அனைவரும் மனிதர்தான்..! அந்த இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளால் ஈர்க்கப்படும் அந்த கடைசிநேரம்வரை பல்வேறு விதமான பலவீனங்களில் மூழ்கியிருந்தவர்கள்.  இவர்கள் வானவர்கள் அல்ல.

தமது அமைப்பின் கொள்கையை நிறைவேற்ற பல்வேறு சூழல்களையும், பிரச்னைகளையும், சொந்த வாழ்க்கையிலும், கூட்டு சமூக வாழ்க்கையிலும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இவ்வளவு அர்ப்பணங்களுக்கு மத்தியில், அவர்கள் முன்வரும் நிலையில், அதைக் கண்டு மகிழ்ச்சியடையாமல், எப்பாடுபட்டாவது அதற்கு ஒத்துழைப்புத் தராமல் .. இயக்கத்தார் மத்தியில் நிலவும் பலவீனங்களை களைந்திட இறைவனிடம் இறைஞ்சாமல், ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு, விதவிதமான கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு மனம் போன போக்கில் செயல்பட்டால் மந்திரத்தால் மாங்காய் விழாது… சகோதரரே… மந்திரத்தால் ஒருகாலும் மாங்காய் விழாது..!

பார்த்தவுடனேயே இயகத்தின் பக்கம் ஈர்க்கப்பட வேண்டுமென்றால், சற்று மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்…. ”என்ன.. அந்தத் தகுதி முதலில் நம்மிடம் இருக்கிறதா?”  ஒரு தலைவர் செய்வது தவறுதான்! ஆனால், அதே தவறை தொண்டர் செய்வதும் சரியாகிவிடாதே..! நாம் எப்போது நம்மைச் சீர்த்திருத்திக் கொள்ளப் போகிறோம்? ஒரு வளரும் இயக்கத்தின் ஆரம்ப பயணமிது. நிறைய குறுக்கீடுகள், இடர்பாடுகள், குறைகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் ஏராளமாக எழலாம். ஆனால், அவற்றைப் பெரிது படுத்தி கொள்கையை, குறிக்கோளை கைவிட்டுவிடக் கூடாது.

காலம் சென்ற மர்ஹும் அலி அஹ்மது சௌத்ரி (ரஹ்) ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் சொல்கிறார்: ”இந்த நாட்டில் இயக்கப் பணிகள் முதல் தரத்தை அடையாவிட்டால்… மாதத்தின் 25 நாட்களை என்னுடைய சுயசீர்த்திருத்தத்துக்காக செலவழிக்கத் தயார்!”

எத்தனை மகத்தான் சொற்கள் இவை! நாம் இப்படி என்றேனும் சிந்தித்ததுண்டா..?

நபிகளார் இறைவனின் திருத்தூதர். சத்தியவான். உண்மையாளர். ஆனாலும்,  அவரது போதனைகள் உடனே செவிமடுக்கப்பட்டனவா?  அவை மக்களின் இதயங்கைளைத் தொட, இருபத்து மூன்று ஆண்டுகள் அல்லவா ஆனாது! இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை எத்தனை துன்பங்கள்..! துயரங்கள்…! தியாகங்கள்..! உயிரிழப்பு அர்ப்பணங்கள்…!  இவற்றின் ஒரு சிறு பகுதியை நாம் ஏற்கத் தயாரா? ஆம்.. என்றால்… நம்புங்கள்.. இயக்கம் வளர்ந்துவிட்டது என்று..!

மறுபடியும் நினைவூட்டுகிறேன்:
  • பல தனிநபர்களால் கட்டப்பட்ட அமைப்புதான் இயக்கம் என்பது.
  • ஒவ்வொரு தனிநபரின் தூய எண்ணத்தின் அடிப்படையிலான உழைப்பு, முயற்சி, அர்ப்பணம் இவற்றின் வழியேதான்  இயக்கம் முன்னெடுத்து செல்லப்பட்டு வெற்றி இலக்கை எட்ட முடியும்.
  • தனி நபரின் பலவீனங்களை, குறைபாடுகளை பெரிது படுத்த வேண்டாம்.
  • அவரின் மற்றொரு புறத்திலுள்ள வலிமைகளைப் பாருங்கள்.
  • குற்றங் குறைகளை மன்னித்துவிடுங்கள்.
  • குறையுள்ள மனிதருக்காக  வருத்தப்படுங்கள். அவர் தம்மைச் சீர்த்திருத்திக் கொள்ள நளினமாக சுட்டிக் காட்டுங்கள்.
  • அவருக்காக இறைவனிடம் இறைஞ்சுங்கள்..!

நபிகளார் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஐந்து விஷயங்கள் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டிருப்பவை:

1.    கூட்டமைப்பு
2.    செவியேற்றல்
3.    கீழ்ப்படிதல்
4.    ஹிஜ்ரத் செய்தல்
5.    அறப்போர் புரிதல்

கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை என்கிறார் நபித்தோழர் உமர். கோபத்தால் தனித்து ஒதுங்கியிருந்து இறைக் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். ஒன்று இயக்கத்துடன் இணைந்து உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த இயக்கத்துடன் இணைந்து இந்த பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்.

கருணையுள்ள இறைவன் நம் பாவங்களையும், பிழைகளையும் மன்னிப்பானக! ஈருலகிலும் வெற்றியைத் தந்தருள்வானாக! உலகெங்கும் அமைதித் தவழ நம்மை வழிநடத்துவானாக!

அன்புடன்,

இக்வான் அமீர்.

மடியிலேயே கை வைக்கிறீயே... கோபாலு..!


”நீங்க விடைபெற்றதுக்கு முன்னாலே.. மது கடைகளையெல்லாம் மூடிட்டு போயிருக்கலாமேயம்மா..தமிழகத்தை சாராய நாடாவதிலிருந்து தடுத்திருக்கலாமேயம்மா!”

Kids Stories: 023: மழலைக் கதைகள்

Tuesday, December 6, 2016

நான் யாரிடம் கேட்க?


”நானாஜீ, முதலமைச்சரம்மா அப்போலாவுலே எத்தனை நாள் இருந்தாங்க? – எனது  பேரன் கேட்டான்.

”எழுபத்தைஞ்சு நாள் இருந்தாங்கப்பா.. ஏன் கேட்குறே..” – என்றேன் நான்.

”இல்ல.. அவங்கள சேர்த்திருந்த ஹாஸ்பிடல் ரொம்பவும் காஸ்ட்லியாச்சே.. அதான் கேட்டேன்..!” – என்றவன் சிறிது நேரம் கழித்து, ”நானாஜீ… ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாயிருக்கும்?” – என்றான் தொடர்ந்து.

”தெரியலேப்பா… அவங்களுக்கு ரொம்பவும் காஸ்ட்லியான மருத்துவத்தை, ஹை-டெக் தொழில்நுட்பத்தோடு கூடிய உபகரணங்களை வைச்சு.. உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள வச்சு… மருத்துவம் பார்த்தாங்க.. அப்படியும் பாவம்… அவங்கள காப்பாத்த முடியலியேப்பா..” – வருத்தப்பட்டேன் நான்.

”நானும் செய்திகள்லே கேட்டேன் நானாஜீ. அதான் கேட்குறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாயிருக்கும்..? சும்மா  சொல்லுங்களேன்..!” – விடாப்பிடியாய் பேரன் நின்றான்.

”என்ன ஒரு நாளைக்கு சில ஆயிரங்களாவது இருக்கலாம். சில லட்சங்களாவது இருக்கலாம். எனக்கு தெரியாது கண்ணா..”

”இந்த ஆயிரங்களை.. லட்சங்களை… எழுபத்தைஞ்சு நாட்களோட பெருக்கினால்… பல லட்சங்கள்… பல கோடிகள் ஆகுமே.. இது யாரோட செலவு?” – அவன் சாதாரணமாகதான் கேட்டான்.

நான் திகைத்து நின்றேன்.

”எனக்கு தெரியாதப்பா.. அவங்க முதலமைச்சர் இல்லியா… அதனாலே கவர்மெண்ட் செலவு செய்திருக்கலாம். இல்லேன்னா..  அவங்களோட சொந்த செலவாக இருக்கலாம். கட்சி செலவிலும் இருக்கலாம். இல்லேன்னா… அந்த ஹாஸ்பிடலே செலவை ஏத்துட்டிருக்கலாம்..!” இப்படிதான் என்னாலே வரிசைப்படுத்த முடிந்தது.

இந்தக் காலத்து பிள்ளையல்லாவா அவன், “நான்- ஸ்டாப்பாக“ கேள்விகளை அடுக்கலானான்.

கவர்மெண்ட் என்பது நாமதான்..! கவர்மெண்ட் பணம் என்பதும் நமது பணம்தான்..! நமக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா.. இவ்வளவு பெரிய செலவை ஏத்துப்பாங்களா? அவங்க பணம்.. கட்சி பணம்னா.. இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது? அந்த ஹாஸ்பிடலே செலவை ஏத்துட்டுச்சுன்னா நமக்கும் ஃபிரீயா அந்த ஹாஸ்பிடல் செலவை ஏத்துக்குமா?” சொல்லுங்க நானாஜீ.

நான் என்னத்த சொல்றது? குழந்தை… குழந்தைத்தனமான கேள்விகளை முன் வைக்குது.. நான் என்னத்த சொல்ல..? நமது அமைப்பிலுள்ள குளறுபடிகளை புரிந்து கொள்ளும் வயது அவனுக்கு இல்லை.

இதற்குள், ”டேய்.. எங்கடா போயிட்டே..?” எனது மகள் அழைக்க… ”இதோ.. வரேம்மா..!” பேரன் அங்கிருந்து ஓடினான்.

நல்ல வேளை பதில் சொல்வதிலிருந்து அப்போதைக்கு நான் தப்பித்தேன்.

நமக்கு இந்த நிலைமை வந்திருந்தா என்னவாகியிருக்கும்? எனது மனது கேட்க..

”ஆரம்பத்திலேயே தூக்கிவாரிப் போட்டிருப்பாங்க.. புதைச்ச இடத்துலே இந்நேரம் புல்லு முளைச்சிருக்கும்!”

- எனது மனசு தயங்காமல் பதில் சொன்னது. 

அதேநேரம் அவன் அடுக்கடுக்காக வைத்த கேள்விகள் என்னுள்ளும் எழுவதை தடுக்க முடியவில்லையே நான் யாரிடம் சென்று கேட்க?

கும்பிட்டுகிறேன் கோபாலு.!


"எந்தப் பிரச்னையும் இல்லாம... சிறப்பா டூட்டி பாத்ததற்கு கும்பிட்டுக்கிறேன்... கோபாலு..!”

Monday, December 5, 2016

இரங்கல்: ஒற்றைப் போராளி வீழ்ந்தார்..!'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
துரதிஷ்டவசமாக கடைசிவரை அவரை கருநிழல்களாக பற்றிப் பீடித்திருந்த நிழல் அதிகாரங்களை புறக்கணித்திருந்தால் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். மக்கள் நலப்பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்க முடியும். அவர் தன் வாழ்நாளில் ஒரு சிறந்த வழிகாட்டியைப் பெற்றிருந்தால் ஒரு எளிய மனுஷியாக வாழ்ந்து உலகின் தலைச்சிறந்த மக்கள் அரசியல் அதிகார நாயகியாக மிளிர்ந்திருக்கவும் முடியும். 
                                                                                                                               >>> இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன், 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன். என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை.... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள்! இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம்.  அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன்!”-  24.02.2008 – அன்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொன்னது இது. சொன்னபடியே ஏறக்குறைய அவர் வாழ்ந்தும் காட்டிவிட்டார்.

இந்திய அரசியலில் ஒரு விடிவெள்ளியாக திகழ்ந்த ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லையாயினும், அவர் வாழ்க்கையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.

ஒற்றையாய் இருந்து, ஒற்றையில் போராடி, ஒரு கட்டத்தில் தமது அன்புக்குரிய வாழ்க்கைத்துணை உறவுகள், மெல்லிய உணர்வுகள் எல்லாம் ஆணாதிக்க சமூகத்தால் பலவந்தமாக பிடுங்கப்பட்டநிலையிலும், பின்னாளில் அந்த அரசியல் உறவையும் இழந்து, அதைத் தொடர்ந்து அரசியல் வாரிசுரிமைக்காக ஒற்றையாகவே போராடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் அவர். அதுவும் பெண்ணியம் புதைக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்றாகும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜனநாயக அமைப்பின் ஒற்றை ராணியாகவே இருந்ததால் என்னவோ அவர் ஆணாதிக்கத்தை தமது காலடியில் பணிய வைத்தார்.

துரதிஷ்டவசமாக கடைசிவரை அவரை கருநிழல்களாக பற்றிப் பீடித்திருந்த நிழல் அதிகாரங்களை புறக்கணித்திருந்தால் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். மக்கள் நலப்பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்க முடியும். அவர் தன் வாழ்நாளில் ஒரு சிறந்த வழிகாட்டியைப் பெற்றிருந்தால் ஒரு எளிய மனுஷியாக வாழ்ந்து உலகின் தலைச்சிறந்த மக்கள் அரசியல் அதிகார நாயகியாக மிளிர்ந்திருக்கவும் முடியும்.

காலம் எல்லோருக்கும், எல்லா வசதிகளும் கொடுப்பதில்லை. அவ்வகையில் கிடைத்த அனைத்தையும் முடிந்தளவு சிறப்பாக்க நினைத்த மக்கள் தலைவர்தான் ஜெயலலிதா.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு (05.12.2016) 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவு 12.15 மணிக்கு மருத்துவமனை நிர்வாகத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு மற்றும் சில மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உலகின் தலைச் சிறந்த மருத்துவக் குழுவினரால், சர்வதேச அளவிலான உயரிய மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனாலும், சிகிச்சை முறைகள் பலனளிக்கவில்லை. மனிதன் மரணத்தை வெல்ல முடியவில்லை!

அறிவியல், தொழில்நுட்பங்களும், மனித முயற்சிகளும் முற்றாக செயலிழந்து போகும் தருணங்களில் மரணமும் ஒன்று. ”நீங்கள் எங்கிருந்தாலும், மரணம் உங்களை வந்தடைந்தே தீரும். நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”” – என்று அழுத்தம் திருத்தமாக உலகின் நிலையாமையை, மனிதனின் இயலாமை மறைநூல் எடுத்துரைக்கிறது. 

இந்த யதார்த்தத்தை வாழும் காலத்திலேயே ஜெயலலிதாவுக்கு முன்னிலைப்படுத்தும் நல்லாலோசகர் அமையவில்லை. நாட்டின் பிரதமர் மோடிவரை அரசியல் தாக்கத்தை உருவாக்கி தனது உடலுக்கு மரியாதை செய்ய வைக்கும் அளவுக்கு செல்வாக்குப் படைத்த ஜெயலலிதா இன்னும் மாபெரும் ஆளுமைகள் நிறைந்த ஓர் அற்புத உலகத் தலைவராக உருவெடுத்திருக்க முடியாமல் போனது மற்றுமோர் துரதிஷ்டமே..! 


Vizhigal காந்தி கொலையும், கோட்சே சிலையும்: வே.மதிமாறன்

கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை???

 
கணநேரத்தில் தமிழக முதல்வர் குறித்து தவறான செய்தியைப் பரப்பிய இந்த டுபாக்கூர் டுபுக்குதாஸ் ஊடகங்கள்தான் 

>>> நாட்டு நடப்புகளை கதைக்கின்றன. 

>>> உலக நடப்புகளை பக்கம் பக்கமாக விவரிக்கின்றன. 

>>> நிரபராதிகளை குற்றவாளிகளாக்குகின்றன. 

>>> குற்றவாளிகளை உத்தமர்கள் என்று பட்டப் பெயரிடுகின்றன.

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடம்: அப்போலோ மருத்துவமனை அறிவிப்பு


தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அப்போலோ செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியும் தன்னுடைய டிவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு சாதனங்கள் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 4, 2016

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி குறித்து கவலை அடைந்தேன். அவர் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடியிடம் சபாஷ் பெற்ற இன்ஜீனீயர் 2,000 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து கைது

அபிநவ் வர்மா
 "மேக் இன் இந்தியா" திட்டத்தில் மேற்கொண்ட சிறந்த பணிக்காகவும், படைபாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் புகழப்பட்ட இளம் பொறியாளர் அபிநவ் வர்மா. இவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2,000 ரூபாய் போலவே, கள்ளநோட்டுக்களை அச்சிட்டதாக வியாழக்கிழமை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அபிநவ் வர்மாவிடமிருந்து 42 லட்சம் போலி 2000 ரூபாய் நோட்டுக்களை பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது.  30 சதவீத தரகு கட்டணம் பெற்று கொண்டு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் போலி நோட்டுக்களை வழங்கி கொண்டிருந்தபோது அபிநவ் வர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடன், அபிநவ் வர்மாவின் சகோதரி விஷாகா வர்மாவும்,  லூதியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீட்டுமனை வியாபாரி சுமான் நாக்பாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.


அபிநவ் வர்மா பயன்படுத்திவந்த புத்தம் புதிய சொகுசு ஆடி காரில் இருந்து போலி 2,000 ரூபாய் நேட்டுக்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மிக முக்கிய அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் சிவப்பு சுழல் விளக்கு அந்த காரில் பொருத்தப்பட்டிருந்தது. இந்தத் தகல்வளை மொஹாலி போலிஸ் துணை கண்காணிப்பாளர் பார்மின்தர் சிங் தெரிவித்திருக்கிறார்.

அபிநவ் வர்மாவின் "லிவ் பிரைய்லி" என்னும் பெயர் கொண்ட சண்டிகர் அலுவலகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுபடுகிறது.

பஞ்சாபில் போலி புதிய ரூபாய் நோட்டுக்கள் பரவி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அதில் தொடர்புடையோரை கைது செய்ய காவல்துறை மும்முரமாக சோதனைகளை நடத்திவருகிறது. இவற்றில் எல்லாம் அபிநவ் வர்மா தலைமையிலான இந்த கும்பல் தப்பித்து வந்தது. கடைசியில், நோட்டுக்களை மாற்றுவதில் தரகு தொகை பெற்ற பிறகும் போலியான நோட்டுக்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.


கைது செய்யப்பட்டிருக்கும் அபிநவ் வர்மா, "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தன்னுடைய சிறந்த பணிக்கும், புதிய படைப்பாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை பெற்ற பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளான பார்வையற்றோர் பயன்படுத்தும் குச்சிகளில் பொருத்தப்படும் உணர்வலை கருவிகளை (சென்ஸார்) தயாரிக்கும்  பொறியியல் பட்டதாரிதான் அபிநவ் வர்மா.

இந்நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பாதுகாப்பு சம்பந்தமான நம்பகத்தன்மை பொதுமக்களிடையே கேள்விக்குறியாகியுள்ளது. 

Thursday, December 1, 2016

அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள்தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருப்போர், அவர்களை தலைமைப் பொறுப்பில் அமர்த்தியோர் ஆகிய இரு சாரருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகள் முக்கியமானவை. சுயநலம், மோசடி, நம்பிக்கைத் துரோகம் ஆகியவை இல்லாதவையாக பரஸ்பரம் நலம் நாடும் பண்புகளாக அந்த பொறுப்புகள் இருத்தல் அவசியம்.

நபித்தோழர் உமர் ஜனாதிபதியாய் பொறுப்பேற்றிருந்த நேரம் அது. அவரது தோழர்களான அபூஉபைதா மற்றும் முஆத் பின் ஜபல் ஆகிய இருவரும் இணைந்து ஜனாதிபதிக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்கள்:

”இறைநம்பிக்கையார்களின் தலைவருக்கு, அபூ உபைதா பின் ஜர்ராஹ் மற்றும் முஆத்பின் ஜபல் ஆகியோர் எழுதிக் கொள்வது. தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!

ஜனாதிபதி அவர்களே, தாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக தங்கள் வாழ்வை சீர்த்திருத்திக் கொள்வதில் மிகவும் அக்கறை உள்ளவராக இருந்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், தற்போதோ தங்களின் தோள்களில் ஏராளமான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒழுக்கப் பயிற்சி அளித்து அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தங்களின் அவைக்கு, உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள். பாமரரும் வருவார்கள். கற்றோரும் வருவார்கள். கல்லாதோரும் வருவார்கள். நண்பர்களும் வருவார்கள். பகைவர்களும் வருவார்கள். ஆனால், எல்லோருக்கும் பாராபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கேற்ப எத்தகைய உயரிய நடத்தையை தாங்கள் கையாள வேண்டியிருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். உலக மக்கள் அனைவரும் இறைவனின் சந்நிதானத்தில் ஆஜராக வேண்டிய அந்த மறுமை நாளை, அச்சத்தால் இதயங்கள் படபடக்கும் அந்த நாளை கண் முன் நினைத்திருங்கள்.  இறைவனின் திருமுன் யாரும் வாய்த்திறக்க முடியாத நாள் அது. இறைவனின் கருணையை எதிர்நோக்கியும், கிடைக்கவிருக்கும் தண்டணைக் குறித்து அச்சத்தாலும் உள்ளங்கள் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் நாள் அது! இந்த நாள் சதா தங்கள் கண்முன் இருக்கட்டும்!

கடைசியாக, ”ஒரு காலம் வரும். அப்போது, மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பராயும், உள்ளுக்குள் பகைவராயும் இருப்பார்கள்!” - என்ற நபி மொழியை ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இந்தக் கடிதம் முற்றிலும் தங்களின் நலம் நாடும் கடிதமாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

தங்கள் மீது இறையருள் பொழிவதாக!

இப்படிக்கு,

அபூஉபைதா மற்றும் முஆத்பின் ஜபல்.

 

இந்த கடிதம் ஜனாதிபதி உமரின் கையில் கிடைத்ததும், அவர் மௌனத்தில் உறைந்துவிட்டார். நெடுநேரம் அப்படியே இருந்தார். ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு இப்படி பதில் கடிதம் எழுதினார்:

”உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கண்டேன். 

அருமைத் தோழர்களே, நான் இதற்கு எப்படி பதில் அளிப்பது? உமர் என்ற தனி நபரிடம், பிரத்யேகமான எந்த வழியும், வலிமையும் இல்லை! அப்படி ஏதாவது கிடைக்கும் என்றால் அது இறைவனின் புறத்திலிருந்துதான் எனக்குக் கிடைக்க வேண்டும்.

முன்னோர்களின் எச்சரிக்கையைப் போலவே, இறுதிநாள் குறித்து நீங்களும் எச்சரித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் பொறுப்புகளை நீங்கள் செவ்வனே நிறைவேற்றிவிட்டீர்கள். இரவும், பகலும் மாறிமாறி வருவதன் மூலம் இந்த இறுதித்தீர்ப்பு நாளும் மிக வேகமாக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தூரமானவற்றையெல்லாம் நெருக்கமானதாக்குகிறது. நவீனத்தையெல்லாம் கண நேரத்தில் பழமையாக்கிவிடுகிறது. முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை ஆரம்பிக்கும்போது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர் அல்லது நரகம் புகுவர் என்பதை நானும் அறிவேன் தோழர்களே!

“ஒரு காலம் வரும். அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பராயும், உட்புறத்தில் பகைவராயும் இருப்பர்!” – என்ற நபிகளாரின் முன்னறிவிப்பை சுட்டிக் காட்டினீர்கள். இது நிச்சயமாக உங்களைக் குறிக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக நம்புங்கள். அந்தக் காலம் வரும்போது, மக்கள் தங்கள் சுய ஆதாயங்களுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். பொது நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அச்சப்படுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் முன்னறிவிப்பு செய்யப்பட்ட நயவஞ்சகம் மக்களிடையே தோன்றும்.

இறுதியாக, என் அன்புக்குரிய தோழர்களே! நீங்கள் உண்மையாளர்கள். முற்றிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் உங்கள் மடல் எழுதப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். உங்கள் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், அச்சமில்லாமல் தொடர்ந்து ஆட்சி, அதிகாரத்தை விமர்சித்தவாறே இருங்கள். 

உங்கள் இருவர் மீதும் இறையருள் பொழியட்டுமாக!

இப்படிக்கு,

உமர்பின் கத்தாப்.

சமகாலத்துக்கு எவ்வளவு பொருத்தமான மடல்கள் இவை!

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் - 01.12.2016 அன்று  வெளியான எனது ஆக்கம்)